×

கவுல்பாளையம் கிராமத்தில்காவலன் ஆப் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விளக்கம்

பெரம்பலூர், மார்ச் 10:கவுல்பாளையம் கிராமத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளு க்கு காவலன் ஆப் பயன்பாடு குறித்து இன்ஸ்பெக்டர் நித்யா விளக்கிப் பேசினார்.
பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் பெரம்பலூர் அருகே அரியலூர் சாலையில் உள்ள கவுல் பாளையம் கிராமத்தில் சிறப்புமுகாம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சாலைப்பாதுகாப்பு மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற் றது.

நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், நகர போக்குவரத்து காவல் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு முகாமில் பெர ம்பலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நித்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சாலைப் பா துகாப்பின் முக்கியத்துவம் மற்றும் காவலன் ஆப்-பின் பயன்பாடுகள் மற்றும் இளைஞர்களுக்கான சாலை பாதுகாவலர் பயிற்சி முறைகள் ஆகியன குறித் து விரிவாக விளக்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துறைத் தலைவ ர்கள் மற்றும் கல்லூரி நாட் டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியை விரிவு ரையாளர்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், செந் தில் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : college students ,Kavalpalayam ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...