×

திருமானூரில் ஜல்லிக்கட்டு 367 காளைகள் சீறி பாய்ந்தன

அரியலூர், மார்ச்10: அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 375 காளைகள் பங்கேற்றன. கால்நடை துறை மாவட்ட இணை இயக்குனர் ஹமீதுஅலி தலைமையிலான மருத்துவர்களின் பரிசோதனையில் 367 காளைகள் அனுமதிக்கப்பட்டு வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. 8 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனைக்கு பின் 150 வீரர்கள் மூன்று பிரிவாக அனுமதிக்கப்பட்ட வீரர்கள் காளைகளை போட்டி போட்டு காளைகளை அடக்கினர்.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, போட்டிபோட்டு அடக்கினர். காளைகளை பிடித்த மாடு பிடிவீரர்களுக்கு சைக்கிள், பேன், கட்டில், மிக்சி, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இது போன்று பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பேன் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். முன்னதாக அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் எஸ்பி சீனிவாசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காளைகள் முட்டியதில் அரியலூர் மாவட்டம், குந்தபுரம் ராஜா(32), கீழகாவட்டாங்குறிச்சி விஜயகாந்த் (36), திருமானூர் ஜெகன்(31), அயன்சுத்தமல்லி மணிகண்டன் (16), சாத்தமங்கலம் சீமான் (50), திருச்சி மாவட்டம் அய்யம்பட்டி வினித்ராஜ்(19) உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த வினித்ராஜ் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Tags : 367 Bulls ,Thirumanur ,
× RELATED கொள்ளிடம் ஆற்றில் குளித்த 9 மாணவர்களில் 3 மாணவர்கள் மாயம்