×

சிவதாண்டேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி பிரம்ம பூதிவலம்

அரியலூர், மார்ச் 10: செந்துறை நெய்வனப்பகுதியில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் அருளாசி பெற்ற தாண்டவப்பிரிய சித்தர் ஜீவசமாதியில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை 4 மணியளவில் அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிவதாண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 30வது பிரம்ம பூதிவலத்தில் பக்தர்கள் கோளறு பதிகம், பன்னிருதிருமுறை பாடல்களை பாடிக்கொண்டு கோயில் உட்பிரகாரத்தில் ஒன்பது முறை வலம் வந்தனர்.
இவ்வாறு வலம் வருவதன் மூலம் தொழில் வளர்ச்சி பெறவும், இழந்த வேலைகள் மீண்டும் கிடைக்கும், சுய தொழில் தொடங்கி வெற்றி பெறவும், கடன் நீங்கி அமைதி பெறவும், திருமண தடை, துன்பங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்பதால் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இசைமாமணி திருவாடுதுறை ஆதீனம் சித்தாந்தரத்தினம் திருநாவுக்கரசு தலைமையில் பெரியபுராணம் பற்றிய ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் அறக்கட்டளையை சேர்ந்த சிவனடியார்கள் செய்திருந்தனர்.

Tags : Purnami Brahma Bhutiwalam ,Shiv Dandeshwar Temple ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...