×

போக்குவரத்து பாதிப்பு செந்துறை அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

அரியலூர்,மார்ச் 10: செந்துறை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் எப்போதும் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. எனவே, உடைப்பை சீரமைக்க வேண்டுமென கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா, தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 442 மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குடிநீர் வீணாவதை தடுக்கக்கோரி மனு:செந்துறை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பாண்டியன் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நக்கம்பாடி பிள்ளையார் கோயில் தெருவில் மின்மோட்டாரில் இருந்து நேரடியாக பொது குடிநீர் குழாயில் இணைப்பு வழங்கி குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால், அங்குள்ளவர்கள் வீட்டின் முன்பு சேறும் சகதியும் ஏற்பட்டு துர்நாற்றம் வீசிவருகிறது. இது தொடர்பாக ஊராட்சியில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.உதவித்தொகை யினை வழங்க கோரிமனு:இதேபோல் மாற்றுத்திறனாளி கோவிலூர் சாமிநாதன் அளித்த மனுவில் ஏலாக்குறிச்சி உள்ள தனியார் வங்கி மேலாளர் கல்விக்கடனை காரணம் காட்டி முன்னறிவிப்பு விடுக்காமல் தனது வாழ்வாதாரத்திற்காக அரசு வழங்கும் மாற்றுத்திறனாளி உதவிதொகையினை நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ளார். இதுகுறிகுறித்து வங்கி மேலாளர் உரிய பதில் அளிக்காமல் அவதூறாக பேசுவதாகவும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க வேண்டி மனு மாவட்ட ஆட்சியர் அளித்துள்ளார்.

Tags : pipe break ,Centurion ,
× RELATED ரபாடாவின் இன்ஸ்விங்கை சமாளிக்க...