×

பெரம்பலூரில் பட்டப்பகலில் 2 பெண்களிடம் 16 பவுன் செயின் பறிப்பு

பெரம்பலூர், மார்ச் 10: பெரம்பலூரில் பட்டப்பகலில் 2 பெண்களிடம் 16 பவுன் செயினை பைக் ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர், சங்குப்பேட் டை அருகேயுள்ள முத்துக்கோனார் திருமண மண்ட பம் அருகில் மேரிபுரத்தில் வசித்து வரும் செல்லதுரை மனைவி வசந்தி(60). ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர். இவர் கடந்த 7ம் தேதி சங்குபேட்டை பஸ் ஸ்டாப்பில் இருந்து வடக்கு நோக்கி நடத்துசென்றார்.அப்போது, தனது வீட்டின் முன்பு அதேதிசையில் பின்னால் பைக்கில் வந்த 2 பேர் வசந்தியிடம் நெருங்கினர். பின்னர் திடீரென இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தவர் வசந்தியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். நகரின் மையத்தில் நடந்த சம்பவத்தால் பெரம்பலூர் நகரவாசிகள் 8ம்தேதி மகளிர் தினத்தன்று அந்தச்செய்தியை பார்த்து பெண்களின் தற்போதைய நிலையை எண் ணி வேதனையடைந்தனர்.இந்நிலையில் மகளிர் தினத்திற்கு மறுநாளான நேற்று (9ம் தேதி) பெரம்பலூர் நகரில் மற்றொரு வசந்தி என்ற பெண்ணிடம் அதே பைக் ஆசாமிகள் 7பவுன் நகையைப் பறித்து கொண்டு தப்பிச் சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் ராஜா தியேட்டர் பின்புறம் ஹான்பியா நகரில் வசிப்பவர் ரவி (41) அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி வசந்தி (38). இவர் நேற்று மாலை 4 மணியளவில் மதன கோபாலபுரம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் வசந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் மதிப்புள்ள தா லிக்கொடியை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில்வேகமாக பறந்து சென்றனர்.அப்போது மயங்கி கீழேவிழுந்த வசந்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தற் போது பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறி த்து வசந்தி கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.பெரம்பலூர் நகரில் மகளிர் தினத்திற்கு முந்தையநாள் வசந்தி என்ற பணி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப் பாளரிடம் 9 பவுன் நகை யும், மகளிர் தினத்திற்கு மறுநாள் அதே பெயரில் உள்ள மற்றொரு வசந்தி என்ற பெண்ணிடம் ஏழு பவுன் தாலிக்கொடியும் பெரம்பலூர் நகரின் உள்ளேயே பறிபோனது நகர வாசிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது.

Tags : girls ,Bow St. ,Perambalur ,graduation ,
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே