×

சீர்காழி காவிரிப்பூம்பட்டினம் நடுநிலை பள்ளியில் அறிவியல் தின விழா

சீர்காழி, மார்ச் 10: சீர்காழி அருகே காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பேராசிரியர் வீழிநாதன் தலைமை வகித்தார். காவிரிப்பூம்பட்டினம் நாட்டார் பஞ்சாயத்தார் காரியதரிசி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய தலைவர் அசோக்குமார் வரவேற்றார். நிரவி எண்ணெய் மற்றும் எரிவாயு குழும முதன்மை பொது மேலாளர் மாறன் துளிர் திறனறி தேர்வு மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கான விருதுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி தேசிய அறிவியல் தின விழா குறித்து சிறப்புரையாற்றினார். இதில் சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன், செம்பனார்கோயில் வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன், சீர்காழி வட்டார கல்வி அலுவலர் பூவராகவன், கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் பாபு, செம்பனார்கோயில் வட்டார கல்வி அலுவலர் புஷ்பலதா, சீர்காழி வட்டார கல்வி அலுவலர் லட்சுமி, தலைமை ஆசிரியர் அன்பழகன் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சீர்காழி ஒன்றிய அமைப்பாளர் தமிழ்வாணன் நன்றி கூறினார்.

Tags : Science Day Ceremony ,Sirkazhi Kaviripumpattinam Middle School ,
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு