×

கீழ்வேளூர் அருகே பரபரப்பு அதிக எடை ஏற்றி செல்லும் லாரிகளால் குழாய் உடைப்பு

கீழ்வேளூர், மார்ச் 10: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி பெரிய காருக்குடிக்கு கொள்ளிடம் கூட்டு குடி நீர் சாட்டியக்குடி நீர் தேக்க தொட்டியில் இருந்து பம்பிங் செய்து குண்டூர் வந்து அங்கிருந்து பெரிய காருக்குடிக்கு செல்கிறது. வலிவலத்தில் இருந்து பெரிய காருக்குடி, குண்டூர் வழியாக வெள்ளையாற்றின் தென் கரையில் பொதுப் பணித்துறையின் சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக சாலையை ஒரு பக்கம் விரிவாக்கம் செய்து மேம்படுத்துவதால் சாலை ஓரத்தில் இருந்த பெரிய காருக்குடிக்கு செல்லும் குடி நீர் குழாய் தற்போது சாலை நடுவே அமைகிறது.இந்நிலையில் சாலை பணிக்கு மணல், ஜல்லி போன்ற பொருட்கள் லாரியில் ஏற்றி செல்லப்படுகிறது. அதிக பாரம் ஏற்றும் பெரிய லாரியில் பொருட்கள் ஏற்றி செல்வதால் லாரியின் எடையை தாங்காமல் சாலையின் நடுவே செல்லும் குடி நீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய காருக்குடிக்கு குடி நீர் கடந்த ஒரு வாரமாக செல்லாமல் உள்ளதால் அந்த பகுதி மக்கள் குடி நீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.இந் நிலையில். பெரிய காருக்குடியை சேர்ந்த பொது மக்கள் சாலை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் சாலையின் நடுவில் செல்லும் குடிநீர்குழாயை சாலை ஓரமாக அமைத்து தர வேண்டும் என்றும், தற்போது குடி நீர் குழாய் உடைப்பை சீரமைத்து தண்ணீர் தர வேண்டும் என்றும் கோரி பெரிய காருக்குடியில் சாலை பணிக்கு பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளை நிறுத்தி முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்குவளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் இது குறித்து சமாதான கூட்டம் ஏற்பாடு செய்து பேசி கொள்ளலாம் என்றும், தற்போது ஜல்லி போன்ற பொருட்களை ஏற்றி வந்த 7 லாரியையும் அனுமதிப்பது என்றும், சமாதான கூட்டம் நடைபெறும் வரை லாரிகள் ஆற்றின் கரையில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை மற்றும் சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டனர்.இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Keevelur ,
× RELATED கீழ்வேளூர் அருகே தேவபுரீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்