×

கரூர் பஸ் நிலையத்தில் இருக்கு... ஆனா இல்லை

கரூர், மார்ச் 10: கரூர் பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி இருந்தும் தண்ணீர் நிரப்பாததால் பயணிகள் குடிநீருக்கு தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.இவ்வாண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே கரூர் பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் ஆங்காங்கே சாலையோர குளிர்பான கடைகள், தர்பூசணி, இளநீர், கரும்புசாறு போன்றவை ஆங்காங்கே வைத்துள்ளனர். கரூர் பேருந்து நிலையத்தில் பகல் வேளைகளில் பயணிகள் தாகத்தை தீர்க்கும் வகையில் பேருந்து நிலையத்தின் நடுப்பகுதியில மினி குடிநீர் தொட்டி (சின்ெடக்ஸ்) வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் தொட்டியில் நீர் நிரப்பப்படவில்லை. இதனால் குடிநீர் பிடிக்க வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். கடைகளில் குடிநீர் பாட்டில் பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பஸ்நிலையத்திற்கு வரும் ஏழை பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே காலியாக தொட்டியை வைக்காமல் தினமும் நீர் நிரப்பி தாகம் தீர்க்க வழியசெய்யவேண்டும். காசு கொடுத்து குடிநீர் வாங்க முடியாதவர்கள் இந்த தொட்டிநீரை நம்பியே வருகின்றனர். எனவே நகராட்சி குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus station ,Karur ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...