×

கிராம மக்கள் கலெக்டரிம் மனு கடவூர் கருணாத்ரிநாதர் பெருமாள் கோயில் மாசிமக தேரோட்டம்

கடவூர், மார்ச் 10: கடவூர் கருணாத்ரி நாதர் பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கரூர் மாவட்டத்தில் வைணவ ஸ்தலங்களில் ஒன்றான கடவூர் கருணாத்ரி நாதர் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டு தோறும் மாசி மாதம் திருவிழா மற்றும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 29ம் தேதி (சனிக்கிழமை) அன்று கொடியேற்ற நிகழ்ச்சி திருவிழா ஆரம்பமாகியது. அன்று முதல் சுவாமி பகலில் பல்லக்கிலும், இரவில் அன்னம், சிம்மம், ஆஞ்சிநேயர், கருடன், ஆதிசேஷன், யானை, குதிரை ஆகிய வாகனங்களில் காட்சி அளித்தார். பின்னர் 8ம் தேதி அன்று பரம்பரை தர்மகர்த்தா அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து ரெங்கத்து பட்டர் மற்றும் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சுவாமி தேருக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் பரம்பரை தர்மகர்த்தா மோகன்குமார் முத்தையா கொடியசைத்தார்.பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா மோகன்குமார் முத்தையா செய்திருந்தார். திருவிழாவில் கடவூர் உள்மகாணத்திலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Manu Kadavur Karunathrinath Perumal Temple Masimaga Chariot ,
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்