×

கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் இன்று காத்திருப்பு போராட்டம்

திருச்சி, மார்ச் 10: கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மலைக்கோட்டை பஸ் டெப்போ முன் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும், கல்வி, சுகாதாரம், இபி போன்று போக்குவத்து கழகத்திற்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.9ஆயிரம் கோடி உடனே வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அன்றே அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று (10ம் தேதி) முதல் மண்டல் தலைமை அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர். முன்னதாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கே.டி ஜங்ஷன் அருகே உள்ள மலைக்கோட்டை பணிமனை முன் நேற்று வாயிற் கூட்டம் நடந்தது. பொறுப்பாளர் கோபி தலைமையில் நடந்த கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : demonstration ,Confederate ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்