×

ரங்கம் கொள்ளிட கரையில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி பலி

திருச்சி, மார்ச் 10: திண்டுக்கல் மாவட்டம், பிரீயூர்பட்டியை சேர்ந்தவர் ரமணி. இவரது மகன் செல்வகணபதி(15). 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் கடந்த 7ம் தேதி சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக நடந்து வந்தார். இதில் நேற்று ரங்கம் கொள்ளிடக்கரை வந்தபோது அனைவரும் குளிப்பதற்கு தயாராகினர். பாதயாத்திரை வந்தவர்கள் துணி துவைத்து குளித்தபோது செல்வகணபதி உற்சாகத்துடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது தேங்கிய தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாத செல்வகணபதி நீரில் மூழ்கினார். உயிருக்கு போராடியவர் கதறி கூச்சலிட்டபோது அனைவரும் செய்வதறியாது திகைத்து காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் செல்வகணபதி நீரில் மூழ்கினார். தகவலறிந்த ரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் தேங்கிய நீரில் மாயமான செல்வகணபதியை தேடினர். சுமார் ஒரு மணி நேரம் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் செல்வகணபதி உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் நீரில் மூழ்கி பலியான செல்வகணபதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Student ,
× RELATED கிணற்றில் மூழ்கி மாணவன் பலி