×

தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர், மார்ச் 10: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 63வது வார்டு ஆலத்தூர் கிராமத்திற்கு குடிநீர் பைப் லைன் வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வரி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதை கண்டித்து தமிழக விவசாய சங்கத்தினர் காட்டூர் மஞ்சள் திடல் பாலத்தில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட குழு உறுப்பினர் பழனிவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாக்கியசாமி, அன்புராஜ், தேரடியான், பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் பாண்டியன், காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் காட்டூர் மஞ்சள் திடல் பாலத்தில் இருந்து ஆலத்தூர் செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலத்தூரில் 7 ஆண்டுகளாக குடிநீர் பைப் லைன் வழங்கப்படவில்லை. ஆனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வரி கட்ட சொல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதையும் கண்டித்தும் காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை மாநகராட்சி ஊழியரிடம் வழங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags : Tamil Nadu Farmers Association ,
× RELATED கொள்முதல் செய்யாமல் வீணான நெல்,...