×

பழுதான துணை சுகாதார நிலையம்

முஷ்ணம், மார்ச் 10:   காவாலக்குடி ஊராட்சியில்  துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்துள்ளதால் சிகிச்சைக்காக நீண்ட தூரம் பொதுமக்கள் செல்லும் அவலம் நீடித்து வருகிறது.  முஷ்ணம் அருகே காவாலக்குடி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொன்னுசாமி மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துணை சுகாதாரநிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை சுகாதாரநிலையம் மூலம் இப்பகுதி பொதுமக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்து இடிந்து செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாளையாங்கோட்டை நெடுஞ்சேரி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று வர வேண்டிய அவலம் உள்ளது. இதனால் நீண்ட தூரம் செல்ல வேன்டி உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பழுதான கட்டிடத்தை சீரமைத்து மருத்துவமனை செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Spam Auxiliary Health Center ,
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...