×

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு தானியங்கள் வரத்து குறைந்தது

கள்ளக்குறிச்சி, மார்ச் 10: கள்ளக்குறிச்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தானியங்களை விற்பனைக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகிறார்கள். நேற்று 263 விவசாயிகள், 1800 மூட்டை தானியங்களை விற்பனைக்கு எடுத்து வந்தனர். இந்நிலையில் உளுந்து, மக்காச்சோளம் வரத்து  திடீரென குறைந்தது. அதாவது 150 மூட்டை மக்காச்சோளம், 500 மூட்டை உளுந்து, 50 மூட்டை கம்பு, மற்றும் வரகு, கம்பு, மணிலா, தட்டைப்பயிர், பச்சைபயிர் உள்ளிட்ட தானியங்கள் விற்பனைக்காக கொண்டு வரபட்டன. இதனை ஆத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.100 கிலோ எடைகொண்ட மக்காச்சோளம் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ1529க்கும், அதிகபட்சமாக ரூ.1609க்கும் விற்பனை செய்யப்பட்டது. உளுந்து ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.5778க்கும், அதிகபட்சமாக ரூ.6743க்கும் விற்பனை செய்யப்பட்டது. கம்பு ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.2400க்கும், அதிகபட்சமாக ரூ.2849க்கும் விற்பனை செய்யப்பட்டது.வரகு ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.1829 க்கும், அதிகபட்சமாக ரூ.2031 க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்தில் தானியங்கள் வரத்து சற்று குறைந்தது. நேற்று ஒருநாளில் மட்டும் பல்வேறு தானியங்கள் ரூ.40லட்சத்து 4 ஆயிரத்து 392 ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டதாக  கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Tags : Regulatory Warehouse ,
× RELATED 20 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள்...