×

சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 4 ஆண்டு சிறை

திருவில்லிபுத்தூர், மார்ச் 10: 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அருப்புக்கோட்டை அருகே உள்ளது சத்தியவாணி நகர். அந்த பகுதியை சேர்ந்தவர் விசுவாசம் (50). கூலி தொழிலாளியான இவர் கடந்த 24.9.2015 அன்று அந்தப் பகுதியில் இருந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பரிமளா, விசுவாசத்திற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags : jail ,rape victim ,
× RELATED ஜெயிலு... பெயிலு... குடிமகனின் ரகளை