×

குறைதீர் கூட்டத்தில் 319 மனுக்கள் குவிந்தன

தேனி, மார்ச் 10: தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடப்பது வழக்கம். இதன்படி நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பல்லவிபல்தேவ் தலைமை வகித்தார். இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின்போது, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, பட்டா கோருதல், பட்டா மாறுதல், இலவச தையல் இயந்திரம் கேட்டும், காவல்துறை தொடர்பான குறைபாடுகள் உள்பட 319 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்கள் மீது உரியத் துறை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தீர்வு அளிக்க வேண்டும் என கலெக்டர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சர்பில் 4 பேருக்கும், மாதாந்திர உதவித் தொகை திட்டத்தின் கீழ் 26 பேருக்கும் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பல்லவிபல்தேவ் வழங்கினார்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்