×

கொரோனா விழிப்புணர்வு முகாம்

வருசநாடு, மார்ச் 10: வருசநாடு அருகே கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு சின்னகாளை தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஊராட்சி செயலர் சின்னசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சிமன்ற துணைத் தலைவர் செல்வம், அனைத்து வார்டு உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு கிராமத்திலும் வீதிவீதியாக சென்று கொரோனா வைரஸ் கிருமி தாக்கம் பற்றியும் அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மூச்சுத்திணறல், இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் தேனி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

Tags : Corona Awareness Camp ,
× RELATED புதுச்சத்திரத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம்