×

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

காளையார்கோவில், மார்ச் 10:  காளையார்கோவில் அருகே அஞ்சவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சக்திவேல்(29). திருப்பூரில் ஓட்டலில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்தவர் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். கடந்த 25ம் தேதி விஷ மருந்தை குடித்துவிட்டு மயங்கினார். அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று காலை இறந்துவிட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் காளையார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

Tags :
× RELATED வேறு பெண்ணை மணப்பதற்காக விஷப்பாம்பை...