×

பெற்றோர் சங்க கூட்டம்

தொண்டி, மார்ச் 10: தொண்டி மேற்கு தொடக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அகமது பாய்ஸ் முன்னிலை வகித்தார். மாணவர்களின் கல்வி திறன் குறித்தும் மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இனி வரும் காலம் வெயில் காலம் என்பதால, மாணவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும், உடல் சுத்தம் குறித்தும் ஆசிரியர்கள் விளக்கினர்.தொண்டி கிழக்கு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமையில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. டாக்டர் மினு பரிசோதனை செய்தார். உடலில் தோன்றும் வெடிப்புகள், கட்டிகள் மற்றும் அனைத்து வகையான பரிசோதனைகளும் நடைபெற்றது.வெயில் காலங்களில் பெரும்பாலும் சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்றும், பழங்கள் மற்றும் தண்ணீர் சத்து அதிகமுள்ள பழங்களை உண்ணவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் வெயிலில் அதிகம் அலையாமல் இருக்கவும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர்.


Tags : meeting ,Parent Association ,
× RELATED டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர்...