×

கார் மீது வேன் மோதல் 14 பெண்கள் காயம்

திருமங்கலம், மார்ச் 10: திருமங்கலம் அருகே, கார் மீது வேன் மோதிய விபத்தில் கோயிலுக்கு சென்று திரும்பிய 14 பெண்கள் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து மதுரை கப்பலூரில் உள்ள சர்வீஸ் நிறுவனத்திற்கு கார் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. காரை ஓட் வந்த டிரைவர், திருமங்கலம்-விருதுநகர் ரோட்டிலிருந்து ராஜபாளையம் ரோட்டின் வழியாக சென்று சர்வீஸ் ரோட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது மதுரை கொம்பாடி கிராமத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் புதுப்பட்டி அருகே உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு, மினிவேன் மூலம் ராஜபாளையம்-திருமங்கலம் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எந்தவித சிக்னலும் கொடுக்காமல் சிவகாசியிலிருந்து காரை ஓட்டிவந்த டிரைவர் திடீரென காரை சர்வீஸ் ரோட்டில் திருப்பவே, கார் மீது மின்வேன் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. காரை ஓட்டிய டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் கொம்பாடியை சேர்ந்த கருப்பாயி (65), வசந்தா (45), சுகன்யா (25), சந்தியா (30) குழந்தை சத்தீஸ்வரன் (1) உள்ளிட்ட 14 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 108 மூலமாக காயமடைந்த பெண்களை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதையில் காரை ஓட்டி வந்து தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய...