×

மேலூர் பகுதியில் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பு கூடும் செலவுகளால் விவசாயிகள் கவலை

மேலூர், மார்ச் 10: மேலூர் பகுதியில் நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களுக்கு வாடகை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும், அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வராதது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் நெல் அறுவடை நடந்து வருகிறது. இந்தாண்டு பாசனத்திற்கு குறையின்றி தண்ணீர் கிடைத்தும், பருவநிலை மாற்றத்தால் நெற்பயிர் பால் பிடிக்கும் தருணத்தில் புகையான் உள்ளிட்ட காரணங்களால் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதற்கான செலவு தொகையை எடுக்க விவசாயிகள் போராடி வரும் நிலையில், கூடுதல் சுமையாக அறுவடை இயந்திரங்களின் வாடகையும் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு மணிக்கு ரூ.1800 முதல் ரூ.2200 வரை அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை கொடுத்துள்ளனர்.

Tags : Melur ,
× RELATED விவசாயிகள் போராட்டம்