×

கோயிலில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி, மார்ச் 10: எழுமலை அருகே, எம்.அய்யம்பட்டியில் பிரசித்தி பெற்ற பொம்முத்தாய் கோயில் உள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 7ம் தேதி மங்கள இசையுடன் மகாகணபதி ஹோமம் உள்ளிட்ட யாக சாலைகளும், 8ம் தேதி துர்காஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளும் நடந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி பொம்முத்தாய்க்கு நேற்று சக்தி உருவேற்றப்பட்டு கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. புனிதநீர் கலசங்கள் கோயிலை வலம் சுற்றி கோபுரத்தில் உள்ள விமான கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிவார பூஜைகளுடன் மேஷ லக்னத்தில் விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், கொடிமர பிரதிஷ்டையும் நடைபெற்றது.இதில் ஏராளனமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.யாகசாலை பூஜைகளை அர்ச்சகர் ராம்குமார் குழுவினர் செய்திருந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை எம்.அய்யம்பட்டி பொம்முத்தாய் கோவில் திருப்பணிக் குழுவினர்களும் பொதுமக்களும் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED சம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்