×

கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி

மதுரை, மார்ச் 10:  மதுரை அரசு மருத்துவமனை கண் சிகிச்சை துறை சார்பில், கண் அழுத்த நோய் வார விழா நேற்று தொடங்கியது. முதல்நாள் நிகழ்வாக, கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி ேநற்று நடந்தது. மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் அருகே, இந்திய மருத்துவக்கழக கட்டிடத்திலிருந்து தொடங்கிய பேரணி அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. பேரணியை கலெக்டர் வினய் துவக்கி வைத்தார். மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி, மருத்துவக் கண்காணிப்பாளர் ஹேமந்த்குமார் மற்றும் கண் சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் விஜயசண்முகம் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு பேரணியில், ‘கண் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவ, மாணவியர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், ‘கண் அழுத்த நோய் தொடர்பான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். இரண்டாவது நாள் நிகழ்வாக மதுரை அரசு மருத்துவமனை ஆடிட்ேடாரியத்தில், தொடர் மருத்துவக்கல்வி கருத்தரங்கம் இன்று நடக்கிறது.

Tags : Awareness rally ,
× RELATED திருப்பைஞ்சீலியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி