×

கொடைக்கானல் விவசாய நலத்திட்டங்களில் முறைகேடு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உறுதி


கொடைக்கானல், மார்ச் 10: கொடைக்கானலில் விவசாயிளுக்கு வழங்கிய நலத்திட்டங்களில் முறைகேடு புகார் நிருபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை உறுதி என தமிழ்நாடு தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் கண்ணன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில விவசாயிகளுக்கு பாசன குழாய்கள், பழ நாற்றுகள், நிழற்போர்வை, விதைகள், தேன் பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கியதில், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் அளித்தனர். இதனை விசாரிக்க தமிழக அரசு நியமித்த தமிழ்நாடு தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் கண்ணன் கொடைக்கானலில் கடந்த பிப் 4, 5 தேதிகளில் விசாரணை நடத்தினார். முதல்நாளில் புகாரில் குறிப்பிட்டிருந்த விவசாய இடுபொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்து, அதில் பதிவான தகவல்களை சேகரித்து கொண்டார். தொடர்ந்து அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அரசின் சார்பில் வழங்கப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்களையும் பெற்று, அது எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பது குறித்த கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் புகாரில் குறிப்பிட்டிருந்த தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து புகார் தெரிவித்த தங்கராஜ், வில்லியம் பால்ராஜ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார். 2ம் நாளில் கொடைக்கானல் மலைப்பகுதியில் நலத்திட்ட உதவிகள் பெற்ற விவசாயிகளிடம் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு சென்னை திரும்பினார். விசாரணை குறித்து அவரிடம் கேட்டபோது, ‘பாரதிய கிசான் சங்கத்தார் அளித்த புகாரின்பேரில் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகார் சம்பந்தமான அனைத்து கோப்புகளையும் எடுத்து சென்றுள்ளேன். அதை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கையாக துறைத்தலைவரிடம் அளிக்கப்படும். அவர் எடுக்கும் முடிவை அடுத்து அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும். தேவைப்படும்பட்சத்தில் மீண்டும் குறிப்பிடப்பட்ட விவசாயிகளிடம் நேரடி விசாரணை மேற்கொள்வதுடன், அக்காலத்தில் பணியாற்றி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்களிடம் விசாரணை

Tags : Kodaikanal ,
× RELATED திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில்...