×

கொடைக்கானலில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கொடைக்கானல், மார்ச் 10:  கேரளா, ராஜஸ்தான், புதுவை மாநிலங்களில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இச்சட்டங்களை அமல்படுத்த மாட்டோமென சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், இச்சட்டம் தொடர்பாக நடந்த சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தர்ணா, மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் அனைத்து ஜமாத் சார்பில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை கண்டித்து சட்ட விளக்க பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது. நாயுடுபுரம் பள்ளிவாசல் தலைவர் முகமது ரசீல் தலைமை வகிக்க, வாழைக்காட்டு ஓடை பள்ளிவாசல் தலைவர் ஆதம் மாலிக் வரவேற்றார். அய்யாவழி தர்ம யுக பேரவை தலைவர் பாலமுருகன், ஒய்எம்ஜே மாநில தலைவர் அல்தாபி ஆகியோர் பேசினர். இதில் அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், ஜமாத் உறுப்பினர்கள், இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு