×

பேக்கேஜ் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கண்டுகொள்ளுமா கல்வித்துறை?

பழநி, மார்ச் 10: பேக்கேஜ் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை கல்வித்துறை கண்டு கொள்ள வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    தமிழகம் முழுவதும் சில தனியார் பள்ளிகளில் 2020- 21ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது துவங்கி உள்ளது. தனியார் பள்ளிகள் சில அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதலாக வசூலித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றன. இந்நிலை தனியார் பள்ளிகள் சில பேக்கேஜ் கட்டண முறையை பின்பற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது,  பள்ளிகளின் தரத்திற்கேற்ப எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை மொத்தமாக பல லட்ச ரூபாய் கட்டணமாக பெறப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. குழந்தைகளின் கல்விக்காக பெற்றோரும் வேறு வழியின்றி இதனை நாடுகின்றனர். இதனால் அவர்களின் குடும்பநிலை மோசமடைகிறது. தற்போது கல்விக்கூடங்கள் சில வட்டிக்கடைகளாக மாறி வருகின்றன. எனவே, கல்வித்துறை பேக்கேஜ் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Department of Education ,
× RELATED 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...