×

நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

கூடுவாஞ்சேரி, மார்ச் 10: நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி நிர்வாகம் இணைந்து, கொரோனா விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில், கொரோனா வைரஸ் பாதிக்காமல் எப்படி தற்காத்து கொள்வது, எப்படி கைகளை கழுவுவது என சுகாதார விழிப்புணர்வு முகாம் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம், சினிமா தியேட்டர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காமராஜபுரம் ஒன்றிய தொடக்க பள்ளி வளாகம், காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் நடந்தது. பின்னர் அங்கு, கிருமி நாசினியான லைசால் ஸ்பிரே அடிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கைகளை எப்படி கழுவுவது என்பது குறித்தும் கொரோனா பாதிப்பு இல்லாமல் தற்காத்து கொள்வது எப்படி என விளக்கி கூறினர்.
நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேசன், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் ரவி, சுகாதார மேற்பார்வையாளர் சபாபதி, சுகாதார ஆய்வாளர் சதீஷ், பேரூராட்சி மேற்பார்வையாளர்கள் ரமேஷ், சீனிவாசன் உள்பட ஏராளமான ஊழியர்கள் களப் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Corona Awareness Camp ,
× RELATED கொரோனா விழிப்புணர்வு முகாம்