×

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 1000 பெண்களுக்கு சேலை

திருவள்ளூர், மார்ச் 10 : திருவள்ளூர் அடுத்த  ஒன்றியம், செவ்வாய்பேட்டையில் அதிமுக மாநில பேரவை இணை செயலாளர் செவ்வை எம்.சம்பத்குமார் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, உலக மகளிர் தின விழா நடந்தது. கூட்டுறவு சங்க இயக்குனர் டி.பூங்கோவன் வரவேற்றார். முன்னாள் ஊராட்சித் தலைவர் எம்.வெங்கடேசன், குட்டிதாஸ், அரங்கநாதன், எம்.ஆனந்தன், கே.செல்வம், பி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்எல்ஏ ஆயிரம் மகளிருக்கு சேலை வழங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பி.ஜெயபால்,  விஜயலட்சுமி ராமமூர்த்தி, எம்.பொம்மி, கவுசல்யா, வக்கீல் கவிதா, எஸ்.ஏ.நேசன், காலனி பாலா, ஊராட்சி மன்ற தலைவர் பெருவை பி.சீனிவாசன், சி.என்.ராமர், பி.பாலச்சந்தர்  எஸ்.ருதுபாலன், எம்.ஜெய்சங்கர்,  எஸ்.ராஜசேகர், வக்கீல் கே.விஜயகுமார், சக்திஜெயபால், பாக்கம்துரை, தொழுவூர் செல்வம், டி.எம்.ஆர்.ரஞ்சித்குமார், எச்.சுனில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Jayalalithaa Birthday Celebration ,
× RELATED ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய...