×

இடங்கணசாலை பேரூராட்சியில் ஒரே நாளில் ₹6.34 லட்சம் வாடகை வசூலிப்பு

இளம்பிள்ளை, மார்ச் 10: இடங்கணசாலை பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில், 55 கடைகள் உள்ளன. ஏலத்தின் மூலம் குத்தகை எடுத்த வியாபாரிகள், பல்வேறு கடைகளை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, வணிக வளாகத்தில் 29 கடைகளை ஏலம் எடுத்தவர்கள் வாடகை செலுத்தாமல், ₹17.40 லட்சம் நிலுவை வைத்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி  நிர்வாகம் சார்பில், கடந்த 3மாதத்தில் நான்கு முறை கடையின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்  அனுப்பியும், வியாபாரிகள் நிலுவை வாடகையை செலுத்தவில்லை.

இதை தொடர்ந்து, நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் வரிவசூல் அலுவலர்கள், பணியாளர்கள், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் 20க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வணிக வளாகத்துக்கு சென்றனர். அங்கு 9 கடைகாரர்களிடம் ₹6.34 லட்சம் வாடகை வசூல்  செய்த அதிகாரிகள், வாடகை செலுத்தாத ஒரு கடையை பூட்டி சீல் வைத்தனர். மேலும், 20 கடைகாரர்கள் ஒரு வார காலத்தில் வாடகை பாக்கியை செலுத்துவதாக, எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்தனர். பேரூராட்சி  நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது.

Tags : bar ,
× RELATED நிர்ணயித்த ஊதியத்தை வழங்க கோரி...