×

சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு விசி., காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஏற்காடு, மார்ச் 10: ஏற்காட்டில் சாலையோர கடைகளை  அகற்றுவதை கண்டித்து, தாலுகா அலுவலகம் முன்பாக  விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏற்காட்டில் அரசு நிலத்தை முதலாளிகளுக்கு குத்தகைக்கு விடுவதையும்,  சாலையோர கடைகளை அகற்றுவதை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் மற்றும்  காங்கிரஸ் கட்சியினர் நேற்று தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்  நடத்தினர். விசிக மாநல செயலாளர் செங்கோலன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மணி, காங்கிரஸ் ஒன்றிய செயலாளர்  ஜெய்ஆனந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஏற்காடு  ஒன்றியத்திற்குட்பட்ட அரசு நிலத்தை முதலாளிகளுக்கு குத்தகைக்கு விடாமல்,  கடைகள் கட்டி சிறு வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடவேண்டும்.

அண்ணா பூங்கா  எதிரில் உள்ள சாலையோர கடைகளை  அகற்றக்கூடாது, மஞ்சக்குட்டை அந்தோணியார்  நகருக்கு, எஸ்டேட் வழியாக செல்லும் சாலையை மக்கள் பயன்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும். சந்தைப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள கடைகளை  சிறு வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள்  எழுப்பினர். தொடர்ந்து தங்களின் கோரிக்கை மனுவை ஏற்காடு தாசில்தார் ரமணியிடம் வழங்கினர். இதில், கந்தசாமி, ரகுராஜ்,  ராஜேஷ், நம்பிக்கை மேரி, மயில்வாகனம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : protest ,party ,removal ,Congress ,roadside shops ,
× RELATED அர்ஜெண்டினாவில்...