×

வாழப்பாடி வட பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா

வாழப்பாடி, மார்ச் 10: வாழப்பாடி வடபத்ரகாளியம்மன் கோயில், 108ம் ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. பரம்பரை தர்மகர்த்தா வான அய்யா வைகுண்டர் குடும்பத்தினர் விழாவை நடத்தினர். இதில் அறக்கட்டளை தலைவர் ஆண்டவர் (எ) பழனிசாமி,  அறங்காவலர்கள் பெருமாள், ராஜா, ரகுவரன், ஆனந்த், கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவில், நேற்று முன்தினம் முப்பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காடையாம்பட்டி: காடையாம்பட்டி அருகே உள்ள சின்ன நாகலூரில் உள்ள சின்ன மாரியம்மன், மதுர காளியம்மன், வெற்றி விநாயகர், வெள்ளை விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கங்கை, யமுனை, காவேரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மற்றும் பக்தர்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பூஜைகளை தொடர்ந்த காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Vazhappady North Padrakaliamman Temple Festival ,
× RELATED கத்திமுனையில் டூவீலர் பறிப்பு