×

திமுக உட்கட்சி தேர்தல் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி ஆய்வு

வாழப்பாடி, மார்ச் 10: சேலம் கிழக்கு மாவட்ட திமுகவின் 15வது கிளைகழகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சேலம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் பனமரத்துப்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, சேலம் தெற்கு, கெங்கவல்லி நிர்வாகிகள் தேர்தல் குறித்தும், நடக்கவிருக்கும் அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், வீரபாண்டி ஆகிய ஒன்றியங்களில் நடக்க உள்ள தேர்தல் குறித்தும் மேற்பார்வையாளரும், முன்னாள் அமைச்சருமான பிச்சாண்டி நேரில் ஆய்வு செய்தார். அப்போத, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சக்கரவர்த்தி, வாழப்பாடி நகர செயலாளர் செல்வம், ஏத்தாப்பூர் நகர செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : minister ,election ,DMK ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...