×

அரசு பள்ளிகளில் அனுமதியை தவறாக பயன்படுத்திய 2 சாய பட்டறைகளுக்கு “சீல்” வைப்பு

பள்ளிபாளையம், மார்ச் 10: பள்ளிபாளையம் அருகே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதியை தவறாக பயன்படுத்தி, சாயமிட்ட 2 சாயப்பட்டறைகளை அதிகாரிகள் சீல் வைத்தனர். பள்ளிபாளையம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், 2 பட்டறைகளில் இருந்து சாய கழிவுநீர் வெளியேறி காவிரி ஆற்றில் கலப்பதாக, பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, குமாரபாளையம் சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன், உதவிப்பொறியாளர் தீனதயாளன், கிருஷ்ணன், ஈரோடு பறக்கும் படை பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் நேற்று பள்ளிபாளையம் வந்தனர். அங்கு கோட்டைகாடு, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த 2  சாயப்பட்டறைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த ஆய்வில் துணிகளை வெளுக்க பெற்ற அனுமதியை தவறாக பயன்படுத்தி, சாயமிடும் பணியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குமாரபாளையம் தாசில்தார் தங்கத்திற்கு, மாசுக்கட்டுப்பாட்டு துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வந்த தாசில்தார், சாயமிடும் பணியில் ஈடுபட்டிருந்த 2 சாயப்பட்டறைகளையும் மூடி சீல் வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : misuse ,dye workshops ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகளை காங்கிரஸ் தவறாக...