×

நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

நாமக்கல், மார்ச் 10: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் முன்னிலை வகித்தார். இதில், மாநில தேர்தல்  ஆணையர் பழனிசாமி கலந்து கொண்டு, நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான  முன்னேற்பாடுகள் குறித்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.  கூட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் அனுபவங்கள், மாநில  தேர்தல் ஆணையத்தின் பல்வேறு பணிகள் கணினிமயமாக்கப்பட்டு இருப்பதன் பயன்கள்  குறித்தும் விளக்கமளித்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19  பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள்  குறித்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு அறிவுரை  வழங்கினார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ள நகராட்சி  மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வார்டு வரையறை பணிகளை விரைந்து  முடிக்கவேண்டும். வாக்குச்சாவடிகளில் மின்வசதி, கழிப்பறை வசதி, குடிநீர்  வசதிகளை செய்யவேண்டும். நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால், மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பொருத்த பேரூராட்சி  அலுவலகங்களில் தேவையான இடவசதிகளை ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என  அறிவுறுத்தினார். கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்  (உள்ளாட்சி தேர்தல்) மீராபாய், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன்,  மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.

Tags : meeting ,Urban Local Elections ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்