×

ராசிபுரத்தில் இலவச மருத்துவமுகாம்

ராசிபுரம், மார்ச் 10:நாமக்கல் எம்பி சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் மாவட்ட பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ராசிபுரம்-சேந்தமங்கலம் சாலையில் நடந்த முகாமினை நாமக்கல் எம்பி சின்ராஜ் துவக்கி வைத்தார். முகாமில், கண், பல், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, மூட்டு போன்ற நோய்களுக்கும், தாய் சேய் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த அழுத்த பரிசோதனை, கர்ப்பப்பை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இசிஜி, ஸ்கேன் போன்றவை மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் காப்பீடு திட்டத்தின் கீழ் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமின் ஒருபகுதியாக ஊட்டச்சத்து கண்காட்சிக் நடந்தது. இதில், ராசிபுரம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, முத்துக்காப்பட்டி, வெண்ணந்தூர் பகுதியிலிருந்து பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்றுச்செல்ல பஸ் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

Tags : Free Medical Center ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து