×

மத்தூரில் ₹13 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை

போச்சம்பள்ளி, மார்ச் 10: மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெட்டம்பட்டி பகுதியில் இருந்து, மாரிகவுண்டர் ரோடு முதல் பி.டி. வரை 785 மீ. சாலை ₹ ₹18.29 லட்சம் மதிப்பிலும், பி.கே ரோடு முதல் பெருமாள்குப்பம் ரோடு வரை ₹21.14 லட்சம் மதிப்பிலும், கே.புதூர் ரோடு முதல் அத்திகானூர் ரோடு வரை ₹12.95 லட்சம் மதிப்பிலும், கெட்டம்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு ₹13.80 லட்சம் மதிப்பிலும், ராஜீவ்நகர் பகுதியில் ₹13.80 லட்சம் மதிப்பீட்டில் பூமியை நடைபெற்றது. இப்பணிகளை ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ், தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமிபெருமாள்,  மத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சக்தி, குன்னத்தூர் பெருமாள், அச்சகங்கள்  சங்க மாவட்ட இயக்குனர் திரியவள்ளி, தொழில் அதிபர் பூபாலன், சிவம்பட்டி ஊராட்சி தலைவர் பழனியம்மாள் மனோகரன், நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pooja ,ration shop ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா.: 45 கடைகளும் மூடல்