×

போச்சம்பள்ளியில் தர்பூசணி விற்பனை அமோகம்

போச்சம்பள்ளி, மார்ச் 10: போச்சம்பள்ளியில், தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக தர்பூசணி, இளநீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை அதிகம் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் பழக்கடை, ஜூஸ் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. போச்சம்பள்ளியில் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை குறைந்துள்ளது. இதனை வியாபாரிகள் டெம்போ, லாரிகளில் கொண்டு வந்து, வீதி வீதியாக சென்று விற்பனை செய்தனர். பழம் ஒன்று கிலோ ₹10 முதல் ₹25க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் சாராயம் காய்ச்ச வேலாமர பட்டைகள் உறிப்பது அதிகரிப்பு