×

நூலகத்தில் மகளிர் தின விழா

உடுமலை, மார்ச் 10: உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில், உலக மகளிர் தின விழா மற்றும் சாதனை மகளிருக்கு விருது வழங்கும் விழா நூலக வாசகர் வட்டம் மற்றும் கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் இளமுருகு தலைமை வகித்தார். துணைத்தலைவர் சிவக்குமார், வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன், பேராசிரியர் கண்டிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை பகுதியில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற 35 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கோட்டாட்சியர் ரவிக்குமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா ஆகியோர் நினைப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

உடுமலையின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் கவிதா, பேராசிரியர்கள் கற்பகவள்ளி, பிரியசில்லா, தலைமை ஆசிரியர்கள் சண்முகப்பிரியா, வள்ளி மயில் மற்றும் சுய உதவி குழு அமைப்பாளர்கள் பேசினர். பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார். சிகரம் அறக்கட்டளை நிர்வாகிகள் யோகானந்த், யாசர் ஆகியோர்  சாதனை மகளிருக்கு தன்னம்பிக்கை புத்தகங்களை பரிசளித்தனர்.ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன், பிரமோத், அருள்மொழி, செல்வராணி மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் செய்திருந்தனர். நூலகர் வி.கணேசன் நன்றி கூறினார்.

Tags : Women's Day ,Library ,
× RELATED மனவெளிப் பயணம்