×

தளி ரோடு மேம்பாலம் பகுதியில் தொடர் விபத்து தடுக்க கோரிக்கை

உடுமலை, மார்ச் 10:உடுமலையில் இருந்து தளி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் வழியாக அமராவதி, திருமூர்த்திமலை போன்ற சுற்றலா தலங்களுக்கும், கேரளா மாநிலம் மூணாறு, மறையூர் உள்ளிட்ட இடங்களுக்கும், ஏராளமான கிராமப்புற பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்கின்றன. இந்த மேம்பாலம் ஏறி இறங்கும் இடத்தில் ஒரு பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மறுபுறம் சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையில் எளிதில் வாகனங்கள் சென்று வர வசதியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நகராட்சி அலுவலகத்தின் சுற்றுச்சுவர் சுமார் 1 மீட்டர் அளவுக்கு அகலத்தை குறைத்து உள்பக்கமாக மாற்றி அமைக்கப்பட்டது. ஆனாலும் பழைய சுவர் இடிக்கப்படாததால் நெருக்கடி நிலவுகிறது. நேற்று இரு சக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. டிப்பர் லாரி டிரைவர் இறங்கி ஓடிவிட்டார். பொதுமக்கள் கூறுகையில், இந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இங்குள்ள சர்வீஸ் சாலையை அகலப்படுத்தினால் விபத்து குறையும். நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : accidents ,area ,Thali Road ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...