×

பண்ணாரி அம்மன் கல்லூரியில் மகளிர் தின விழா

சத்தியமங்கலம், மார்ச் 10: சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாடினர். பண்ணாரி அம்மன் குழுமத்தின்தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கல்லூரி ஆலோசகர் எம்.பி.விஜயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் மகளிர் சாதனையாளர்களுக்கான விருது தொழிலதிபர் கீதா நாகு, செயிண்ட் ஆஞ்லோஸ் மற்றும் இணைஆசிரியர் ரேவதி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை தொழிலதிபர் நந்தினிரங்கசாமி பேசுகையில், பாரதியார், காந்தியடிகள், அம்பேத்கர் ஆகியோர் பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்கள். தற்போது பெண்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

கல்வி வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரத்தில் 27 சதவீதம் மட்டுமே பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பெண்கள் வேலைவாய்ப்புக்கு ஆண் சமுதாயம் உதவ முன்வரவேண்டும். மாற்றம் என்பது பெண்களிடமிருந்து வரவேண்டும். வேறுபாடுகளை களைய பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவுகின்றன என்றார். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். சிறந்த மாணவிக்கான விருது தேசிய மாணவர் படையைச் சேர்ந்த ஹரினிக்கு வழங்கப்பட்டது.

Tags : Women's day ceremony ,Pannari Amman College ,
× RELATED கரூர் நீதிமன்றத்தில் மகளிர் தின விழா