×

ஜி.கே.வாசன் எம்.பி.யாக அறிவிப்பு த.மா.கா.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஈரோடு, மார்ச் 10: அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ராஜ்யசபா எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். இதனை வரவேற்கும் விதமாக ஈரோட்டில் த.மா.கா.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் கவுதம், மாவட்ட துணை தலைவர் சுந்தரசாமி, மண்டல தலைவர்கள் சின்னுசாமி, மணியன், சிறுபான்மை பிரிவு தலைவர் முஜாகித் அலிகான், மாவட்ட பொதுசெயலாளர் ரபீக், வழக்கறிஞர் பிரிவு பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : sweepstakes celebration ,GK Vasan ,
× RELATED 7,700 செவிலியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்