×

திருத்துறைப்பூண்டி அருகே அரசு கல்லூரியில் கையெழுத்து இயக்கம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 10: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலைச்சேரி பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரியில் பகத்சிங் வேலைவாய்ப்பு திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் அரசாணை 56 ஐ ரத்து செய்ய வேண்டும்தமிழர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆசிரிய மற்றும் அரசு காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.வேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கையெழுந்து இயக்கம் நடைபெற்றது. அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சரவணன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் கணேஷ், ஒன்றிய துணை செயலாளர் வசந்தராஜா கையெழுத்து இயக்கத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள். கல்லூரி கிளை நிர்வாகிகள் ராகவன், குபேந்திரன் சஞ்சய் நித்தியஸ்ரி உட்பட கலந்து கொண்டனர்.

Tags : Government College ,Tirupathirapundi ,
× RELATED கிருமி நாசினி, முககவசம் கொடுத்து குடை...