×

கட்டிமேடு ஊராட்சியில் குப்பை தரம் பிரித்து கொட்ட அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 10: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் பல ஆண்டுகளாக குப்பைகள் அள்ளிமண்ணடிதெரு கடைசில் குப்பை கொட்டும் இடத்தில் கொட்ட பட்டு வந்தது. குப்பை கொட்டிய பிறகு காற்றில் பறந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல தொற்றுநோய்கள் பரவும் அபாய நிலை நிலவி வந்தது. இதனை அறிந்த கட்டிமேடு திமுக ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன், துணை தலைவர் பாக்கியராஜ் ஆகியோர் குப்பை கொட்டி பறந்த இடத்தில் குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதற்காக இரண்டு குழிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அமைத்து உள்ளனர்.

இதுகுறித்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் கூறுகையில், ஊராட்சியில் அள்ளப்படும் குப்பைகள் தரம் பிரித்து குழியில் கொட்டப்படும். கடைகள், வீடுகள், முன்பு குப்பை போடக்கூடாது. குப்பைகளை தொட்டியில் தரம் பிரித்து போட வேண்டும், கட்டிமேடு ஊராட்சியை முழுசுகாதர கிராமமாக மாற்றி அமைக்க பல முயற்சிகள் ஊராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், வர்த்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கோவை மாவட்டத்தில் ஓட்டல் மற்றும்...