×

ஆட்டூர் அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 10: திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில் கல்வி சீர்வரிசை எடுத்தல் விழா நடைபெற்றது. பெற்றோர்கள் பள்ளி தேவையான கலர் பிரிண்டர் மற்றும் பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னையன், தலைமை ஆசிரியை ஜாசி, ஆசிரியர்முத்துக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனலெட்சுமி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Autor Government School ,
× RELATED 1000 உதவித்தொகை பெறுவதற்கு நடைபாதை வியாபாரிகள் ஆவணம் சமர்ப்பிக்கலாம்