×

வறுத்தெடுக்கும் வெயிலால் களக்காடு மக்கள் தவிப்பு

களக்காடு, மார்ச் 10: களக்காட்டில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.களக்காடு பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் வெயில் கொளுத்தி வருகிறது. பகல் 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடும் வெப்பமும் நிலவுகிறது. சாலைகளில் கானல் நீர் தோன்றி மறைகிறது. அனல் காற்றும் வீசுகிறது. வெப்பத்தால் பொதுமக்கள் தவிக்கின்றனர். குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. மதியம் நேரங்களில் சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. களக்காடு அண்ணா சாலை எப்போதும் பிசியாகவே இருக்கும். பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து என களை கட்டியிருக்கும். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதியம் அண்ணா சாலையும் வெறிச்சோடியது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருப்பதால் மற்ற ஊர்களை காட்டிலும் களக்காட்டில் வெயில் தகித்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tags : Kalakkadu ,
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...