×

விளை நிலத்தில் புகுந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினர்

கடையநல்லூர், மார்ச் 10:   சொக்கம்பட்டி திரிகூடபுரத்திலிருந்து கருப்பாநதி அணைக்கு செல்லும் சாலை  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோப்புகளில் புகுந்த யானைக் கூட்டங்கள்  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொடர்ச்சியாக 150 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியும்,  வாழை, கரும்பு, பனை,  மாமரங்களை  சேதப்படுத்தியுள்ளன. எனவே வனத்துறையினர் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்றைய தினகரன் நாளிதழில்  செய்தி வெளியானது.
இதனையடுத்து வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில்  வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று  பட்டாசு வெடி வைத்தும், தீ மூட்டம் ஏற்படுத்தியும் விளை நிலங்களுக்குள் புகுந்த யானைகளை  வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.  

Tags : forest department ,
× RELATED வனத்தில் இடம்பெயரும் யானைகள்: வனத்துறையினர் கண்காணிப்பு