×

மாறாந்தை பள்ளி ஆண்டு விழா

பாவூர்சத்திரம், மார்ச் 10: ஆலங்குளம் அருகே மாறாந்தையில் உள்ள செயிண்ட் அசிசி மெட்ரிக். பள்ளியின் முதலாம் ஆண்டு விழா நடந்தது. மாணவி மாலினி வரவேற்றார். பள்ளி நிர்வாகி அந்தோனி சேவியர் தலைமை வகித்து பேசுகையில், மருத்துவக் கல்லூரிகள் உட்பட நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு எங்கள் பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும், என்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சைமன், நசரேன், ரஞ்சித் மற்றும் பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பள்ளி முதல்வர் தமிழ்செல்வன் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த எல்இடி அரங்கில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவி ராஜன் ரேஸ்மி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தமிழ்செல்வி, ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.


Tags : Marathon school ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது