×

பெண்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கல்

நெல்லை, மார்ச் 10: தென்காசி மாவட்ட தலைமை இளைஞரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சங்கரன்கோவிலில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அகில இந்திய விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டலில் நடந்த இவ்விழாவில் பெண்களுக்கு இலவச ஹெல்மெட் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட இளைஞரணி தலைவர் மாரியப்பன், முகமதுகான், முத்துக்குமார், கில்லி சரவணன், குமார், வெண்மதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேஷ், தவுடு, ரவி, சந்தோஷ், வைரம், சங்கர், விருதுநகர் மாவட்ட மகளிரணி தலைவி ஜெகாவிஜய், சிவா விஜய் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு