×

அம்பை பள்ளியில் இருபெரும் விழா

அம்பை, மார்ச் 10: அம்பை மெரிட்  மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா மற்றும் மெரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 35வது ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா, 2 நாட்கள் நடந்தது. தாளாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகி நாகலட்சுமி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாணவி பெலின் ஜெர்ஷா வரவேற்றார். முதல்வர் மாடசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை கலந்து கொண்டு எல்கேஜி, யுகேஜி மற்றும் முதலாம் வகுப்பு மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டி பேசினார்.  நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். மாணவி மகா நன்றி கூறினார்.

தொடர்ந்து நடந்த அம்பை மெரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 35வது ஆண்டு விழாவிற்கு தாளாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினார். நிர்வாகி நாகலட்சுமி சுப்பிரமணியன் முன்னிலை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். முதல்வர் மாடசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி கூடுதல் சிறப்பு கலெக்டர் சங்கரநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். ஆசிரியர்கள் பியூலா மேரி, முரளி கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். துணை முதல்வர் ஆறுமுகம்  நன்றி கூறினார்.

Tags : school ,Ambai ,ceremony ,
× RELATED அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர...