×

ஆத்தூரில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

ஆறுமுகநேரி, மார்ச் 10:   மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் உலக மகளிர் தினவிழா, பெண்களுக்கான  சட்டவிழிப்புணர்வு கருத்தரங்கு, மரக்கன்றுகள் வழங்குதல் என முப்பெரும்விழா ஆத்தூர் சக்திவேல் பிள்ளை மைதானத்தில் நடந்தது. சிவசக்தி மகளிர் குழு தலைவி தெய்வநாயகி வரவேற்றார்.  மதர் சமூகசேவை நிறுவன இயக்குநர் எஸ்.ஜே.கென்னடி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி கேக் வெட்டினார். மதர் சிவசக்தி மகளிர் குழு செயலாளார் உமாசங்கரி  பொருளாளர் சிவஞானம் முன்னிலை வகித்தனர்.

    திருச்செந்தூர் வக்கீல் மங்கையர்க்கரசி  பெண்களுக்கான  சட்ட உரிமைகள் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு சமூகநலத்துறை மாவட்ட ஒருங்கிணைந்த மைய நிர்வாகி செலின், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார். இதையடுத்து மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் எஸ்.ஜெ. கென்னடி, மரக்கன்றுகள் வழங்கினார். இதில் மதர் மகளிர் சுய உதவிக்குழுவினர் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : Athur ,
× RELATED சேலம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி